Home இலங்கை உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை – சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியா?

உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை – சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியா?

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் எனும் சந்தேகத்திலையே காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் இருந்து , வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , ” தாயிடம் இருந்து சிலர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளனர்” என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதனை அடுத்து , பணிப்பாளர் சட்ட வைத்திய அதிகாரிக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார். அத்துடன் திடீர் மரண விசாரணை அதிகாரியும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

அதன் போது பெண்ணின் கை பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டுள்ளது, அது தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணை பராமரித்தவர்களிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை தாம் வைத்தியசாலையில் பெண்ணை அனுமதிக்கும் போது பெருவிரலில் மை அடையாளம் இல்லை எனவும் , பின்னர் எப்படி வந்தது என தமக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை , வெளிநாட்டில் வசிக்கும் உயிரிழந்த பெண்ணின் மகன் வைத்தியசாலைக்கு நேரில் வருகை தந்து பெண்ணை அடையாளம் காட்டிய பின்னரே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் , அது வரை சடலம் பிரேத அறையில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More