270
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் 90 ஆயிரம் ரூபாய் பணத்தையும், ஐந்தரைப் பவுண் பெறுமதியான நகையையும் திருடிய குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் பாவனைக்காகவே தான் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, நகை மற்றும் பணம் என்பனவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Spread the love