515
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த படகில் சிறார்களும் உள்ளூர்வாசிகளும் கந்தர்பாலிலிருந்து பத்வாரா வரை பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் உள்ளிட்ட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love