ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக ‘ஞானார்த்த பிரதிபய’ கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று (19.04.24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட அழைப்பாணைக் கடிதத்தில், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகள் உங்களுக்குத் தெரியும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதால், அது குறித்து உங்களிடம் விசாரிக்க உத்தேசித்துள்ளோம்” என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.