Tik Tok செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. Tik Tok செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் ByteDance நிறுவனம் 9 மாதங்களுக்குள் Tik Tok கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால், அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது.
Tik Tok செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி இரகசியமாகத் தகவல்களை எடுக்கிறது என வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட Tik Tok அமெரிக்காவில் நிறையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது.
கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் Tik Tok செயலி இரகசியமாகப் பயனாளர்களின் பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் தனிநபரை அடையாளம் காணும் வகையான தகவல்களைச் சீனாவுக்கு அனுப்புகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட சட்டம் டிக்டோக்கை விற்க பைட் டான்ஸுக்கு ஒன்பது மாதங்கள் காலக்கெடுவை நீட்டிக்கிறது, மேலும் விற்பனை நடந்து கொண்டிருந்தால் மூன்று மாதங்கள் நீட்டிக்க முடியும்.