இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) கடந்த சில தினங்களில் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L.பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு வகையிலான இருதரப்பு கூட்டு நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் சந்தோஷ் ஜாவினை கடந்த செவ்வாய்கிழமை (23.04.24) சந்தித்துள்ளனர்.
அரசியல் உறவுகள் மற்றும் இரு தரப்பு நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.
லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க,பைசர் முஸ்தபா மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரையும் அவர் சந்தித்துள்ளார்.