ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார்.
குறிப்பாக விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுள்ளதாகவும், அவருக்கு பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது எனவும், அவருக்கே தாம் முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விஜயதாச ராஜபக்ச வுக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.