211
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கோசங்களை எழுப்பினர். அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினர்.
அத்துடன், அரச அதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Spread the love