191
யாழ்ப்பாணம் , வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவதாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த காணிக்கு சென்ற காவல்துறையினர் மிதிவெடிகளை மீட்டுள்ளனர்.
குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன் , குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் அவற்றை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Spread the love