அவுஸ்ரேலியாவில் கல்வி கற்க செல்லும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர்.
மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.05.24) முதல், சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்ரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் அவுஸ்திரேலிய டொலர்கள் 29,710 இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஒக்டோபரில், இந்தத் தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்ரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டது.
சர்வதேச மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவது அவுஸ்ரேலியாவின் முன்னணி வருமானமாக அமைந்திருக்கிறது.
இதற்கமைய 2022/23 ஆம் ஆண்டில் 36.4 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை வருமானமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.