கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ராசெனக்கா நிறுவனம் இன்று (08) அறிவித்துள்ளது. புதிய வகை கொரோனாவை எதிர்கொள்லும் பல தடுப்பூசிகள் தற்போது சந்தைகளில் இருப்பதால், கொவிசீல்ட் தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் லண்டன் உயா் நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடா்பான வழக்கில், பிாித்தானியாவைச் சேர்ந்த அஸ்ராசெனக்கா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், ஒக்ஸ.போட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் மிகவும் அரிதான பக்க விளைவாக இரத்தம் உறைதல் ஏற்படலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்தியாவில் Serum நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கொவிசீல்ட் தடுப்பூசியில் 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், உலகளவில் தங்களின் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக கொவிசீல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.