மும்பையில் நேற்று திங்கள்கிழமை வீசிய புழுதிப் புயல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக, விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில்உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதுடன் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர பலகையொன்று சரிந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மும்பை நகரில் திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக விளம்பர பலகையொன்று சரிந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர். 70 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் கொண்ட குறித்த விளம்பர பலகை, வீடுகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது சரிந்து வீழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது்ன் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொிவிப்பட்டுள்ளது