201
பொது வேட்பாளர் தொடர்பில், யாரும் இதுவரையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரை தொடர்பு கொள்ளவில்லை என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது ஆதரவினை வழங்குவோம் என முன்னரே அறிவித்துள்ளோம். எமது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கே.
பொது வேட்பாளர் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அறிகிறோம். ஆனால் இது வரையில் எம்மை எந்தவொரு தரப்பும் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் அணுகவில்லை.
பொது வேட்பாளர் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இ தன் பின்னால் பெரியளவிலான சக்திகள் உள்ளதாக அறிகிறோம் என மேலும் தெரிவித்தார்.
Spread the love