239
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை , புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியின் பிறந்ததினம் இன்றைய தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார். யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love