214
போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சங்கானை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் சோதனையிட்ட போது , இளைஞனின் உடைமையில் இருந்து 25 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்து மானிப்பாய் காவல்து நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love