லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதனால் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்சுக்கு சொந்தாமான SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாக தொிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து , விமானம் உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனா். உயிரிழந்தவா் 73 வயதான பிரித்தானிய பிரஜை என தகவல் வௌியாகியுள்ளது.
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானம் வங்காள விரிகுடாவைக் கடந்த சில நிமிடங்களில், வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதன் பயண உயரத்திலிருந்து 6,000 அடி கீழே இறங்கியதாக விமான கண்காணிப்பு தரவு தெரிவித்துள்ளது.