208
திருகோணமலை – சல்லி கடல் பகுதியில் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது கடந்த திங்கட்கிழமை (20) காலை 10.மணியளவில் சல்லி பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற சல்லி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான குட்டிராசா சசிக்குமார் மற்றும் 22 வயதுடைய முருகையா சுஜந்தன் ஆகிய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மீனவர்கள் காணாமல் போன இருவரை தேடி கடலுக்கு சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love