163
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தம்பிராசா ரவிசந்திரன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கனகபுரம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
Spread the love