இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவு உணவு பாதுகாப்பின்மை வீதம் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ள 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில். குறித்த ஆண்டில் 24% குடும்பங்கள் மட்டளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதம் மார்ச் மாதத்தில் 17% ஆக காணப்பட்டதுடன், ஓகஸ்ட் – செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 24% வரை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆண் தலைமைத்துவ குடும்பங்களில் 23 வீதமாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 32 வீதமாகவும் உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாகவும் 26% குடும்பங்களில் போதுமானளவு உணவு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை எனவும் குடும்பமொன்று அதன் மொத்த செலவில் 62 வீதத்திற்கும் மேல் உணவுக்காக செலவிடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.