199
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றில் வாங்கிய றோல் ஒன்றினுள் சுமார் 4 இன்ச் அளவு நீளமுடைய கறல் ஏறிய கம்பிதுண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் குறித்த கடையில் 80 ரூபாய் வீதம் 10 றோல்களை கொள்வனவு செய்து , தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு றோல்களை பரிமாறி சாப்பிட்ட வேளை றோல் ஒன்றினுள் கம்பி துண்டு காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை றோல்கள் வாங்கிய கடைக்கு அவற்றை விநியோகம் செய்வது , சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஆகும். எனவே குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love