180
வடக்கில் அண்மையில் நியமனம் பெற்ற 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளைய தினம் செவ்வாய்க் கிழமை கடமைகளைப் பொறுப்பேற்க முடியும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.
நியமனம் பெற்றவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை தமது கடமையேற்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய தினம் நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால், புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love