யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினரின் படகு வழி மறித்த போது , படகில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை கடலில் நீண்ட தூரம் துரத்தி சென்று மணற்காடு கடற்பகுதியில் படகினை கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.
படகினை சோதனையிட்ட போது , அதனுள் இருந்து 70 கிலோ கேரளா கஞ்சாவை மீட்டதுடன் , வடக்கில் இருந்து கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இரு நபர்களையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் படகினையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவற்துறையிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.