231
யாழ்ப்பாணத்தில் 31 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி மணற்காட்டு பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளை இளைஞன் ஒருவர் பதுக்கி வைப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் , கஞ்சா பொதிகளுடன் இளைஞனை கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் 31 கிலோ நிறையுடையது எனவும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவ தரப்பி னர் தெரிவித்துள்ளனர்.
Spread the love