176
தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பறிபோக போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் மீன் பிடி தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக இருந்தமையால், வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ள கூடியதாவிருந்தது.எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீன்பிடி தடைக் காலம் முடிவடையுள்ளது, அதனால் மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையலாம். எனவே இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்
அதேவேளை இந்திய பிரதமராக மோடி மீண்டும் தெரிவானமைக்கு தமக்கு மகிழ்ச்சியே என தெரிவித்தவர் இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
Spread the love