199
யாழ்ப்பாணம் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு நேரில் சென்று , ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் , 05 கணனிகள் , பிரிண்டர் மற்றும் ஸ்மார்ட் போர்ட் (smart board) ஆகியவற்றையும் கையளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் , மாணவர்கள் ஆங்கில மொழி புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர் , ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகளையும் எடுத்து உரைத்தார்
அத்துடன் பாடசாலைக்கு அரங்குடன் கூடிய இரட்டை மாடி கட்டடம் ஒன்றினை அமைத்து தருவதாக உறுதி அளித்த எதிர்க்கட்சி தலைவர் , நடனம் கற்கும் மாணவிகளுக்கான நடன உடைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியினையும் கையளித்தார்.
Spread the love