யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார்.
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது எமது ஆட்சி உருவாகும்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாச் சந்திரபிரகாஷ் உள்ளி்ட்ட அமைப்பாளர்களும் உடனிருந்தனர்