459
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் கட்டுமான நிறுவன தொழிலாளா்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியா்களும் உள்ளடங்கலாக 41 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
குறித்த கட்டிடத்தில் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வந்துள்ள நிலையில் குறித்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love