Home சினிமா பிரதீப் கே .விஜயன்  காலமானாா்  

பிரதீப் கே .விஜயன்  காலமானாா்  

by admin

 

தெகிடி, மேயாத மான், லிப்ட், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் கே .விஜயன்  காலமானாா் .  இவா்  பல படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை   கதாபாத்திரங்களில்    நடித்துள்ளார்.

திருமணமாகாத இவர் சென்னை –  தனியாக வசித்து வந்தநிலையில், நேற்று (12) முதல்  தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், சந்தேகமடைந்த நண்பர்கள்   காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற  காவல்துறையினர், அவர் குளியலறையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அவரது தலையில் காயமும் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள  காவல்துறையினா்   பிரதீப் விஜயனின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் இரண்டு தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்திருகடகலாம் என நம்பப்படுகிறது.

பப்பு என அழைக்கப்படும் பிரதீப் விஜயன், 2013 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இறுதியாக அவர் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More