182
முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்கு மதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து , யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று , 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Spread the love