208
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞனை சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து , 2 கிலோ 300 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர். சந்தேகநபரை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love