968
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (14) மீன்பிடித் தடை முடிவதற்கு முன்பாகவே முறையான அனுமதிச் சீட்டு எதுவும் பெறாமல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம் அடைந்ததை அடுத்து அதில் இருந்த ஏனைய இரண்டு மீனவா்கள் அருகில் இருந்த படகு மூலம் மீட்கப்பட்டு கரை சேர்ந்துள்ளனர். ஆரோக்கியம், பரகத்துல்லா என்ற இரண்டு மீனவர்களே கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love