ஆறு ஹஜ் யாத்திாிகர்கள் வெப்பத் தாக்குதலால் உயிரிழந்துள்ளனா் என தொிவிக்கப்பட்டுள்ளது. மக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகின்றது
இந்த ஆண்டு வருடாந்திர கூட்டத்தின் போது வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என சவுதி அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
உயிாிழந்த ஆறு பேரும் ஜோர்டானிய குடிமக்கள் என, ஜோர்டானிய வெளியுறவு அமைச்சு நேற்று சனிக்கிழமை (15) தொிவித்துள்ளது, ஜனாஸாக்களை புதைக்கும் நடைமுறைகள், அவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு மாற்றுவது குறித்து ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்கின்றனர் என்று சவுதி பொது ஆணையகம் தெரிவித்துள்ளது.இலங்கையைச் சேர்ந்த ஹஜ் யாத்திாிகர்களுக்கு எவ்விதமான பாதிப்பு இல்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.