இந்திய மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ஒரே தண்டவாளத்தில் பயணித்த இரு புகையிரதங்கள் மோதியதில், 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர் .
டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணியில் உள்ள புகையிரத நிலையத்தை நோக்கி கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் என்ற புகையிரதம் சென்று கொண்டிருந்த போது சிக்னல் கிடைக்காததால் அது நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த வேளை அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு சரக்கு புகையிரதம் . முன்னால் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் புகையிரதத்தின் பின்புறத்தில் மோதியதனால் 3 பெட்டிகள் பலத்த சேதமடைந்ததனால் அதில் இருந்த 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.