உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கை செல்ல உள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணத்தின் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.