1.5K


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர்.
வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஐந்து வருடங்களாக புனரமைக்கப்படாத இந்த வீதியால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற போதிலும் மிக மோசமான நிலையில் வீதி பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐவர் ஆளுனரின் செயலாளரை சந்தித்து ஆளுநரின் ஊடாக ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது.



Spread the love