இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடாப்பட்டுள்ளது
இதேவேளை கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆர்.சம்பந்தனின் பூதவுடல் இன்று (03) பிற்பகல் நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இங்கு பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இறுதிச் சடங்கு எதிவரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.