பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.
இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொள்வார் என எதிர்பாரக்கப்படுகிறது. உமா குமரன் ஈழத்து தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
உமா குமரனை எதிர்த்து போட்டியிட்ட கென்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.
பிரித்தானிய பொதுத் தோ்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கான வாக்கெண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கென்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.