நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சத்தின் இடையே 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதுடன் ஐவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் CRJ-200 விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானம் 19 பேருடன் பயணித்ததாகவும், புறப்பட்டு சிறிது நேரத்தில் ஓடுபாதையை விட்டு விலகி ஓடியதால் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாககவும், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.