பதில் காவற்துறை மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை எனவும், தற்போதைய காவற்துறை மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லை எனவும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை இன்று ஆற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
காவற்துறை மா அதிபர் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவித்து பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.
“ காவற்துறை மா அதிபர் பணியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு நினைவூட்டுகிறேன். இது தொடர்பில் சபாநாயகர் விரைவில் தலையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என பிரதமர் தெரிவித்தார்.