தற்போதைய சூழலில் எமது நாட்டில் நாங்கள் வாழ்வதற்காக பல போட்டிகளை பல வழிகளிலும் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். அந்த வகையில் நாங்கள் நஞ்சுடன் வாழ்ந்து அதனுடன் போட்டியிட வேண்டிய தேவைப்பாடு அதிகரித்துள்ளது. இவ் உலகில் தற்போது நஞ்சற்ற இயற்கை பசளைகளை பாவிக்கும் உணவுமுறைகளை மீளவும் உருவாக்குதல் அத்தோடு அதை பாவித்து பயன் பெறல் எனும் நோக்கோடு போராசிரியர் சி.ஜெயசங்கரின் வழிகாட்டலிலும் எம்மோடு இணைந்து செயற்படும் பல உறவுகளின் கருத்து பகிர்வோடும் இணைந்து சூரியா கலாசார குழுவினர் தங்களது நாடக செயற்பாட்டினூடாக சமூகத்துடன் இணைகின்றோம்.
நவீன உலகத்தில் கால் தடம் பதித்து நவீனமே வாழ்க்கையாக கொண்டு வாழும் நாங்கள் உணவு என்னும் பெயரில் ஏதோ ஏதோ உணவுகளை உண்டு உயிரை கையில் கொண்டு வாழ்கின்றோம். தற்பொழுது பாரம்பரிய உணவு முறைகள் இயற்கை பசளைகளை கொண்டு உணவுகளை உற்பத்தி செய்தல் முறைகளை மீளவும் உலகிற்கு கொண்டு வருதலும் அதை நம் மக்களும் நாங்களும் பாவித்து பயன்படுத்தி பயன் பெறுவதே எமது முழு நோக்கமாகும்.
எமது சூழலில் எம்மை சுற்றியுள்ள பகுதியில் எமது முன்னையோர் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இலைகள், கீரைகள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை பயன்படுத்தி ஆரோக்கிய சூழலில் வாழ்ந்து வந்துள்ளார்கள். நாங்கள் மீண்டும் அவ் வாழ்க்கையை கொண்டு வருவதற்காக அக் காலத்தில் காணப்பட்ட தற்போதைய சமூகத்திற்கு தெரியாத அறியாத மருவி மறைந்து போகின்ற உணவுகள், சாப்பாடுகள், வாழ்க்கை முறைகள், சமூக நிலப்பாடுகள் போன்றவற்றை மீண்டும் இவ் உலகிற்கு கொண்டு வருகின்றோம்.
இன்று நாம் ஆரோக்கியம் என்று நினைத்து உண்டு வாழ்ந்;து வந்த உணவுகள் அனைத்தும் தற்போது கடைகளில் இல்லாமலும் நாங்கள் பல வழிகளிலும் பாவித்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் எமது ஊட்டச்சத்தை நிர்ணயிப்பதும் அதே சமயம் போசாக்கு குறையாத ஆரோக்கிய வாழ்வை தக்க வைப்பதும் இக்கால கட்டத்தில் எமக்கு கட்டாயமான ஒரு விடயமாக உள்ளது.
ஆகவே தான் நாங்கள் எமது காலடியில் புதைந்தும் மறைந்தும் கிடக்கும் பல நல்ல விடயங்களை மீண்டும் தேடி இக்கால கட்டத்தில் வெளி கொண்டு வருவது மிகவும் முக்கியமான பெரும் பொறுப்பாக அனைவர் கையிலும் உள்ளது. ஆகவே தான் எமது வாழ்தலை உறுதிப்படுத்த நாங்கள் மீண்டும் சமூகத்துடன் இணைந்து தேடலையும் ஆரோக்கிய வாழ்தலுக்கான அடித்தளத்தையும் ஈட்டு கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் நாங்கள் உள்ளுர் உணவுகளை அறிந்து மீளவும் கொண்டுவருவதுடன் அதை பயன்படுத்தவும் தொடங்கியுள்ளோம். உணவே மருந்தான காலம் போய் மருந்தே உணவான காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நாங்கள் இயற்கை முறையிலான உணவுகளை உருவாக்குவதும் அதை பயன்படுத்தி ஆரோக்கியமான தன்னிறைவான சமூகத்தை உருவாக்குவதுமே எமது நோக்கமாகும்.
அந்த வகையில் இந்த எழுத்தாணி நாடகமானது பல இடங்களில் தொடர்ச்சியாக அளிக்கை செய்யப்பட்டு பாரம்பரிய உணவுகளின் சிறப்பினை வெளியுலகிற்கு எடுத்துரைத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக இவ் நாடகம் 2024ம் ஆண்டு ஆணி மாதம் நடைபெறும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த உற்சபத்தில் 27,28 ம் திகதி ஆகிய இரண்டு நாட்களும் இடம் பெறும் நன்னிலம் சந்திப்பு களத்தில் எழுத்தாணி நாடகத்தின் சில பகுதிகள் அளிக்கை செய்யப்படவுள்ளது.
“இயற்கையை நேசிப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்.”
சமையல் ஆற்றுகையுடனான அளிக்கை.
கல்யாணி சுந்தரலிங்கம்
சூரியா கலாசார குழுவினர்கள்.