பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சரவையை உயர் நீதிமன்றம், தெளிவுப்படுத்தலுக்காக, அழைத்துள்ளது.
முறைகேடான E- வீசா மோசடியினால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், ,உல்லாசப் பயணிகள் வருகை போன்றவற்றிக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
மனுக்களை, நாடாளுளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தனித்தனியாகத் தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென அறிவித்தனர்.