599
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில், அடுத்த வாரம் அறிவிப்புக்கள் வெளியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் வேட்பாளர் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அநேகமான தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வேட்பாளராக நிறுத்த சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் ,அதுக்கென நியமிக்கப்பட்ட குழு ஆராய்ந்து வருகிறது.
அடுத்த வாரமளவில் ஒருவரை தெரிவு செய்து அவரின் பெயரை அறிவிப்போம் என தெரிவித்தார்.
Spread the love