372
யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை, ஹயஸ் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் சுன்னாக காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love