390
நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது.
நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பொது மக்களின் வாகனங்களை திருப்பி அனுப்புகின்ற காவற்துறையினர், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love