191
எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் சற்று முன்னர் கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் கையெழுத்திட்டன.
மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் 34 அரசியல் கட்சிகள், கூட்டணிகளுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளதாகவும், இது வெறுமனே அரசியல் கூட்டணி அல்ல என்றும் ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் கையெழுத்திட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Spread the love