132
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (21.08.24) ஏற்பட்ட மனசூறாவளி காற்று காரணமாக குருநகர் பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தின் கூரை பறந்து சேதமடைந்தது.
குறித்த அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பகுதியவில் சேதமடைந்ததுடன் 11பேர் பாதிப்படைந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டது.
அதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நாகதம்பிரான் கோவில் மீது பனைமரம் முறிந்து விழுந்ததில் கோவில் சேதமடைந்துள்ளது.
Spread the love