136
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குநர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன், தேர்தல் சட்டங்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் யூரியூப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அதிகாரிகளுடன், கலந்துரையாடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
Spread the love