நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஏ.எச்.எம். பௌசி 2010ம் ஆண்டு அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில், வெளிநாடொன்றினால் அமைச்சு அலுவல்களுக்காக வழங்கப்பட்ட வாகனத்தை அவா் தனது தனிப்பட்ட வகையில் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்து , இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கில் அவருக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதன் பின்னர், ஏ.எச்.எம். பௌசி நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது