170
யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி புலோலி பகுதியை சேர்ந்த இராசையா யோகராஜா (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
புலோலி பகுதியில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற வான் – துவிச்சக்கர வண்டி விபத்தில் ,துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love