331
தீக்காயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த துவரகன் நிருத்திகா (வயது 30) எனும் குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி தீக்காயங்களுடன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையில் குடும்ப தகராறு நீண்ட காலமாக காணப்பட்டு வந்ததாகவும் , சம்பவ தினத்தன்று கணவனே மனைவிக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் உறவினர்களால் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love